Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
2030ஆம் ஆண்டளவில் கொள்கலன்கள் நடவடிக்கை மூலமாக ரூபாய் 30 மில்லியன்கள் வருமானத்தை ஈட்டுவதே கொழும்பு துறைமுகத்தின் இலக்காகும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி தெரிவித்தார்.
மேலும், 2030ஆம் ஆண்டுக்குரிய இலக்கை அடையும் பொருட்டு, தற்போதைய கொழும்பு துறைமுகத்தை ஆறு மடங்காக விஸ்தரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் எதிர்வரும் வரவு-செலவு திட்டம் தொடர்பான மீளாய்வு கூட்டம், இன்று (16) காலை துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
'தெற்காசிய வலயத்தில் அதிகளவு போட்டிதன்மையுடன் கூடிய சமுத்திரவியல் சேவை வழங்கல் மத்திய நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வதே துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் எதிர்கால திட்டமாகும்.
மேற்கத்திய, கிழக்கு பாதையூடாக முன்னெடுக்கப்படுகின்ற சமுத்திரவியல் நடவடிக்கைகளில் இலங்கை மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. விசேடமாக இந்தியா, சீனா, சிங்கப்பூர் மற்றும் ஏனைய நாடுகளுடன் கைச்சாத்திடவுள்ள ஒப்பந்தங்களுக்கமைவாக சந்தை மற்றும் பொருட்கள் பரிமாறல் மத்திய நிலையமாக இலங்கை பாரிய சேவையொன்றை ஆற்றவேண்டியேற்படும்' என்றார்.
'தற்போது, கொழும்பு துறைமுகத்தை எடுத்துக்கொண்டால் ஆண்டொன்றுக்கு ரூபாய் 06 மில்லியன் கொள்கலன்கள் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வளவை 2030ஆம் ஆண்டளவில் ரூபாய் 30 மில்லியன் வரையில் வளர்ச்சியடையச் செய்யலாம். இச்செயற்பாட்டின் பொருட்டு கொழும்பு துறைமுகத்தை ஐந்து மற்றும் ஆறு மடங்காக விஸ்தரிக்க வேண்டிய தேவை எதிர்காலத்தில் ஏற்படும்.
இக்காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவுச் செய்து, மேற்கத்திய முனையமொன்றினை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்நடவடிக்கைகளை 2020ஆம் ஆண்டளவில் பூர்த்திச் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். அதன் பின்னர் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி இரு கட்டங்களாக துறைமுகத்தை அபிவிருத்திச் செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago