2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வருடாந்த பரிசளிப்பு விழா

Niroshini   / 2016 நவம்பர் 22 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, நேற்றுத் திங்கட்கிழமை பாடசாலை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் வலயக் கல்விப்பணிமனையின் கல்விப் பணிப்பாளர் டயிள்யூ.பி.எஸ்.கே.விஜேசிங்கவின் வழிகாட்டலில் பாடாசலை அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடமேல் மாகாண கலை, கலாசாரம், விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் கல்வி அமைச்சர் கே.ஆர்.எம்.சந்தியா குமார ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அத்துடன், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், எஸ்.எச்.எம்.நியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் அலிசப்ரி, முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் எம்.ஐ.இல்யாஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.என்.ஜௌபர் மரிக்கார், புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ் மொழிப் பிரிவுக்குப் பொறுப்பான உதவிக்கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர், தொழிலதிபர்களான ஏ.எச்.எஸ்.ரமலான், எம்.ஐ.எம்.நயீம், முஹம்மட் நிஸ்தார் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், தேசிய ரீதியில் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசித்த மாணவர்கள்,  விடுமுறையின்றி பாடசாலைக்கு சமூகமளித்த மாணவர்கள் அதிதிகளினால் சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், கடந்த 2015ஆம் ஆண்டு முழுவதும் அரை நாள் விடுமுறை பெற்ற முனவ்வரா மலிக் எனும் ஆசிரியை உட்பட வருடம் முழுதும் ஏழு நாட்களுக்கு குறைவாக விடுமுறை எடுத்த ஆசிரியர்களும் சிறப்பான முறையில் பாடசாலையை வழிநடாத்திச் செல்லும் அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மி உட்பட பாடசாலையில் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்றுக்கொடுத்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .