2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வத்தளை தமிழ் மாணவர்களுக்கு வகுப்புகளை ஆரம்பிப்பதாக உறுதி

Niroshini   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேலதிக முதலாம் ஆண்டு வகுப்புகளை வத்தளை தமிழ் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியஇ அமைச்சர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார்.       

வத்தளையில் தமிழ் மாணவர்களுக்கு புதிய பாடசாலை அமைப்பது தொடர்பில் மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தபோதே முதலமைச்சர் இவ்வாறு உறுதியளித்தார்.

இதன்போது, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,

'2017ஆம் ஆண்டு ஜனவரியில் முதலாம் வகுப்புக்கு வத்தளையில் வாழும் தமிழ் பிள்ளைகளுக்கு முதலாம் ஆண்டுக்கான 200 தமிழ் பிள்ளைகளை உள்வாங்கும் 40 பேர் கொண்ட ஐந்து தற்காலிக வகுப்புகளையாவது வத்தளையில் உள்ள  ஏனைய பாடசாலைகளில் ஆரம்பித்து தாருங்கள்.

அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் புதிய பாடசாலை கட்டி முடிக்கப்பட்டப் பின் இந்த தற்காலிக வகுப்புகளை அந்த புதிய தமிழ் பாடசாலையில் இணைத்துக்கொள்ளலாம்' என்றார்.

மேலும், 2017ஆம் வருடம் ஜனவரி மாதம் முதலாம் வகுப்புக்கு அனுமதி தர இந்த உத்தேச  புதிய பாடசாலை தயாராகுமா என்பதை உறுதிப்படுத்துங்கள். இல்லாவிட்டால், கடந்த வருடம் உட்பட கடந்த பல்லாண்டுகளாக ஜனவரி மாதங்களில் முதலாம் வகுப்பு அனுமதியின்போது வத்தளையில் தமிழ் பெற்றோர் சந்திக்கும் கொடுமையை எதிர்வரும்  2017ஆம் வருடமும் சந்திக்காமல் தடுத்து பாதுகாப்பது உங்கள் பொறுப்பு' எனவும் தெரிவித்தார்.

இதனை கவனத்தில் கொண்ட மாகாண முதலமைச்சர்,  2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேலதிக முதலாம் ஆண்டு வகுப்புகளை வத்தளை தமிழ் பிள்ளைகளுக்கு ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .