2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி நபர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று புதன்கிழமை (23) இரவு ரயிலில் மோதி உயிரிழந்துள்ள நபர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

உயிரிழந்த நபர், கொழும்பு - 05 ஐ வசிப்பிடமாகக் கொண்டிருந்த 51 வயதுடையவர் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெள்ளவத்தை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .