2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வெள்ளை வேனுக்கு பதிலாக வருமான வரி அதிகாரிகள் அனுப்பப்படுகின்றனர்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் வற் அதிகரிப்புக்கு எதிராக கடையடைப்பு நடத்தியவர்களை பழிவாங்க, வெள்ளை வேன் வராது என்று ஊடக அறிக்கைகளை வெளியிட்டவர்கள், இன்று வெள்ளை உடை உடுத்திய வருமான வரித் துறையினரை அனுப்பியுள்ளதாக சந்தேகம் எழுகின்றது என முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“வற் அதிகரிப்பு என்பது ஒரு சாதாரன விடயம் அல்ல. அரசாங்கம் பல முனைகளிலும் வற் அதிகரிப்பை அறவிட முயற்சிப்பது இறுதியில் சாதரண மக்களின் தலையிலேயே அந்த சுமை ஏற்றப்படுகின்றது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு முனையில் அதாவது இறக்குமதி செய்யும் பொழுது மட்டுமே வற் அதிகரிப்பு விதிக்கப்பட வேண்டும். அது 15சதவீதமாகவோ அல்லது 20 சதவீதமாகக் கூடவே இருக்கலாம்.

ஆனால் பல முனைகளிலும் மீண்டும் மீண்டும் வற் அதிகரிப்பை விதிப்பது முறையான செயல் அல்ல என்ற காரணத்தினாலேயே வர்த்தகர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்த அண்மையில் கடையடைப்பினை செய்திருந்தனர். அவர்கள் அரசாங்கத்தை மாற்றுவதற்கோ வேறு எந்த வித காரணத்திற்காகவோ தமது எதிர்ப்பை வெளியிடவில்லை. இதனை புரிந்து கொள்ளதாத ஒரு சில தமிழ் அமைச்சர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சொன்னார் என்ற காரணத்திற்காக கடைகளை மூட வேண்டாம் என்று தெருவில் இறங்கி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் போது பலருடன் வாய்த்தர்க்கம் எழுந்ததாகவும் தெரிய வருகின்றது. இருப்பினும் வர்த்தகர்கள் முழுமையான கடையடைப்பை நடத்தி அதில் வெற்றியும் பெற்றனர்.

இது இவ்வாறு இருக்க ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக வெள்ளை வேன் ஒரு போதும் வராது என்று தமிழ் அமைச்சர் ஒருவர் வேடிக்கையான ஊடக அறிக்கையினை வெளியிட்டிருந்தார். ஆனால் இன்று குறிப்பாக கடையடைப்பு நடத்திய வர்த்தகர்களின் கடைகளுக்கு வெள்ளை உடை உடுத்திய வருமான வரித்துறையினர் சோதனை என்ற பெயரில் உட்புகுந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ஒரு சில கடைகளை சீல் வைத்தும் உள்ளனர். பல வர்த்தக நிலையங்களுக்கு பாரிய தொந்தரவையும் கொடுத்துள்ளனர். இவை அனைத்துக்கும் கடையடைப்பை நடத்த வேண்டாம் என்று கூறிய அமைச்சர்கள் தான் காரணம் என்ற சந்தேகம் வர்த்தகர்கள் மத்தியிலே வலுபெற்று வருகின்றது.

கடையடைப்பை நடத்த வேண்டாம் என்று கூறிய தமிழ் அமைச்சர்கள் இவ்வாறு வருமான வரித்துறையினர் தமிழ் பேசும் வர்த்தகர்களை மட்டும் குறி வைத்து இவ்வாறு செயல்படும் பொழுது ஏன் இதனை தடுக்க முடியவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .