Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Gavitha / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்
புத்தளம், அநுராதபுரம் வீதியின் அளுத்கம 18ஆம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், தாயொருவர் உயிரிழந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை (14) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், யமுனா ஜீவனி (வயது 42) என்ற 3 பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
பக்கத்துக்கு வீட்டுக்குச் சென்று விட்டு, தனது வீட்டுக்கு திரும்பி வந்துக்கொண்டிந்த பெண்ணை, கொழும்பிலிருந்து நொச்சியாகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறி மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த பெண், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாகவும் விபத்துடன் தொடர்புடைய லொறி சாரிதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
36 minute ago
44 minute ago
49 minute ago