2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வாடகை வாகனங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Princiya Dixci   / 2016 மே 12 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு வாகனங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, குழுவொன்று, மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர். 

நீர்கொழும்பு, கட்டானை, சீதுவை, ஜா-எல மற்றும் மினுவாங்கொட போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த குழுவே இவ்வாறான மோசடியில் ஈடுபடுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விமான நிலையத்தில் சட்டவிரோதமாகச் செயற்படும் வாடகை வாகன சாரதிகள், இக்குழுவைப் பயன்படுத்தி பயணிகளைத் தமது வாகனங்களில் பயணிப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும், இந்தக் குழுவினர், குறைந்த வாடகைக்கு வாகன சேவையைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து பின்னர் இடைநடுவில் அதிக பணத்தைக் கேட்பதாகவும், கட்டுநாயக்க பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அத்துடன், இக் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கட்டுநாயக்க பொலிஸார் எச்சரித்துள்ளனர். 

இதேவேளை, இந்தக் குழுவினரைச் சேர்ந்த நால்வர், கட்டுநாயக்க பொலிஸாரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .