Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
குறித்த சந்தேகநபர்கள், பதிவு இலக்கம், என்ஜின் இலக்கம் மற்றும் பதிவு இலக்கம் என்பவற்றை மாற்றியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
வத்தளை, கேகாலை, புளத்கொஹுபிட்டிய மற்றும் களனி ஆகிய இடங்களைச் சேர்ந்த 38, 41, 42 மற்றும் 45 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு பஸ்கள், இரு டிப்பர்கள், இரு முச்சக்கரவண்டிகள், லொறி, போலியான நான்கு சீல்கள், 25 வாகனங்களின் பதிவுப் புத்தகங்கள், பலரின் அடையால அட்டைகளின் நிழற் பிரதிகள், போலி இலக்கத் தகடு தயாரிப்பதற்கான இயந்திரங்கள், கணினி, இலங்கையின் இலச்சினைகள் மற்றும் 14 போலி வாகன இலக்கத் தகடுகள் என்பன இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜா-எல பொலிஸார், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் அஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago