Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 மார்ச் 03 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண் யாசகரின் ஒன்றரை மாத ஆண் குழந்தையை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணொருவர் வனாத்துவில்லு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பம்பலப்பிட்டிய பொலிஸார், கைக்குழந்தை தங்களுடைய பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தனர்.
குழந்தையை கடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஓட்டோவின் சாரதி, தரகர்களாக செயற்பாட்ட நான்கு ஆண்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரின் கணவன் வெளிநாட்டில் பணியாற்றுகின்றார். அந்தப் பெண் பிரசவத்துக்காக கொழும் பிரதேசத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
கர்ப்பமடைந்து நான்கு மாதங்களில் சிசு மரணித்துவிட்டது. எப்படியாவது குழந்தையொன்றுடன் கிராமத்துக்குச் செல்லவேண்டும் என்று அப்பெண் நினைத்துள்ளார்.
குழந்தையை விலைக்கு வாங்குவதற்காக 3 இலட்சம் ரூபாய் பணத்தை கையில் வைத்துக்கொண்ட அந்தப் பெண், குழந்தையொன்றை தேடித்தருமாறு தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த தனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்த நபர், இந்த பெண்ணுடன், தெமட்டகொட, பொரளை மற்றும் பம்பலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் குழந்தை ஒன்றை தேடி, பல நாட்கள் நடந்து திரிந்துள்ளனர்.
பம்பலப்பிட்டியவில் சப்பாத்து தைக்கும் நபரொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், பெண் யாசகரை சந்தித்துப் பேசி, ஒன்றரை வயதான ஆண் குழந்தையை பணத்துக்கு வாங்குவதற்கு விலைபேசியுள்ளனர்.
அதற்கு இணக்கம் தெரிவித்துள்ள பெண் யாசகருக்கு அப்பெண், 1 இலட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். தரகருக்கு 50 ஆயிரம் ரூபாய், ஓட்டோ சாரதிக்கு 25 ஆயிரம் ரூபாய், ஏனைய இருவருக்கும் 25 ஆயிரம் ரூபாயை அப்பெண் கொடுத்துள்ளார்.
அதன்பின்னர் பெண் யாசகருடன் தெமட்டகொடையில் உள்ள புடவைக்கடைக்குச் சென்ற பெண், அங்கு அந்த குழந்தைக்காக 1,900 ரூபாய்க்கு ஆடைகளை கொள்வனவு செய்துள்ளார்.
குழந்தையை பெண்ணிடம் கையளிப்பதற்கு முன்னர் 1 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்ட பெண் யாசகர், குழந்தையை வழங்குவதற்கு மறுத்துவிட்டார்.
அதன்பின்னரே, கொம்பனி வீதியிலுள்ள வாகன தரிப்பிடத்தில் வைத்து பெண் யாசகரிடம் இருந்து குழந்தையை அபகரித்துக்கொண்டு வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனத்தின் மூலமாக வனாத்தவில்லுவ பிரதேசத்துக்கு குழந்தையை கொண்டுச் சென்றுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
59 minute ago
2 hours ago