Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Editorial / 2022 நவம்பர் 13 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். இஸட். ஷாஜஹான்
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 32 வருடங்களாகியுள்ள நிலையில் கிளிநொச்சி, நாச்சிக்குடா கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் ' எமது உரிமை மீட்புப் போராட்டம்' என்னும் தொனிப்பொருளில் நடைபவணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடை பவணி, ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி கிளிநொச்சி, நாச்சிக்குடாவில் இருந்து ஆரம்பமாகியது. நடைபவணியில் இருவர் பங்குபற்றுகின்றனர்.
சனிக்கிழமை (12) இரவு இவர்கள் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தை வந்தடைந்து அங்கு விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று (13) காலை 8.30 மணியளவில் விடுதிக்கு வந்த பொலிஸார், நடைபவணியில் ஈடுபட்ட இருவரையும் அவர்களுக்கு துணையாக வந்த மற்றுமொருவரையும் பொலிஸ் நிலையத்துக்குச் அழைத்துச் சென்றுள்ளனர்.
நாச்சிகுடாவை சேர்ந்த ஹசன் குத்தூஸ் முஹம்மத் ஆமீம் , சையது அலி ஈஷா மொஹிதீன், இனாமுதீன் உமர் பாரூக் ஆகிய மூவருமே அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்த மூவரையும் பொலிஸ் வாகனத்தில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு செயலாளரை சந்தித்து தாங்கள் செவ்வாய்க்கிழமையே ஜனாதிபதியை சந்திக்க இருந்ததாகவும் இது தொடர்பான ஆவணங்களை தயாரித்து வருவதாகவும் அவர்கள் அங்கு தெரிவித்தனர்.
இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் மகஜரை கையளிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இந்த சந்திப்பு முற்பகல் வேலை இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
4 hours ago
9 hours ago