Editorial / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஜெயரட்ணம்
பிரதேசவாசிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த, முன்னாள் இராணுவ வீரரான ஆமி கமல், 10 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் இராணுவ சீருடை என்பவற்றுடன், வெலிப்பன்னைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹேன்பிட்டிய பிரதேசத்தில், வீடொன்றில் நடத்திய விசேட சோதனையின்போதே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோதமானமுறையில் வெடிகுண்டுகள் மற்றும் டீ-56 ரக துப்பாக்கி என்பவற்றை வைத்திருந்தமை, பிரதேச ஆடைத் தொழிற்சாலை கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில், சந்தேக நபருக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சந்தேக நபர், இலங்கை இராணுவத்தில் கோப்ரலாக சேவையாற்றிய காலத்தில், சட்ட விரோதமான முறையில் டீ56 ரக துப்பாக்கி ஒன்றை கைவசம் வைத்திருந்த குற்றத்தின்பேரில் பணி நீக்கம் செய்யப்பட்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கயை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025