Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2017 ஜூலை 06 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பௌத்தத்துக்கு முதலிடம் கொடுக்கப்படும் அதேசமயம் மற்றைய மதங்களுக்கும் இடங்கொடுக்கப்படவேண்டும். அதில் பிழையொன்றும் இருப்பதாக தெரியவில்லை” என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார்.
அன்மையில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதியினால், களுத்துறை மாவட்டத்துக்குப் பொறுப்பாக அர்ஜீன ரணதுங்க நியமிக்கப்பட்டார்.
இதற்கமைய உடனடிவேலைத்திட்டத்தை முன்னெடுத்து, வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட களுத்துறை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதன்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“பௌத்த மதத்துக்குக் கொடுக்கப்படும் முதலிடத்தைக் குறைப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சியெடுக்குமாயின் அந்த நிமிடமே அரசாங்கத்தை விட்டு விழகிவிடுவேன். அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில் பொறுப்பாக நான் கூறுகிகன்றேன். எமது நாட்டின் யாப்பில் பௌத்த மதத்தின் முதலிடம் இல்லாமல் போகும் என்று எங்கேயும் நாங்கள் கூறவில்லைவில்லை. அப்படி கூறவும் மாட்டார்கள்.
“ஆயினும், பௌத்தமதத்துக்கு மூன்றாவது இடத்தை கொடுக்க நினைக்கின்றனர், முயற்கிக்கின்றனர் என்று, வேறுபட்டவர்கள், வேறுபட்ட கதைகளைப் பேசி புதிய அரசியலமைப்பு தொடர்பான தீயை முட்டுகின்றனர். இது முழுக்க முழுக்க அரசியலுக்காக.
“இவ்வாறான கருத்து சிங்கள பௌத்த மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும். ஆனால், எமக்கு முக்கியமாகத் தென்படுவது பௌத்தமதத்தின் முதன்மைத்தானத்தைப் பாதுகாப்பதேயாகும்.
“இன்று அரசாங்கத்தில் இருக்கும் எல்லாத் தலைவர்களும் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக தீவிரமாக யோசிக்கின்றனர். அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் மற்றும் தமிழ் தலைவர்கள் ஒருநாளும் சென்னதில்லை பௌத்த மதத்துக்கான முதன்மை ஸ்தானத்தை குறைப்பது தொடர்பாக. அதுதான் நாட்டுக்கு முக்கியமானது. இந்த நாட்டை ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கள பௌத்த தலைவர்கள் மட்டுமே மீட்கவில்லை. அவர்களோடு தமிழ் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும், கிறிஸ்தவ தலைவர்களும் இருந்தனர். எல்லா மதத்தைச் சேர்ந்த தலைவர்களே ஒன்றுபட்டு வெற்றிபெற்றனர்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
4 hours ago
5 hours ago