2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மனோ - ஜேம்ஸ் டோரிஸ் சந்திப்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 16 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய அமைப்புகளின் தலைவருமான மனோ கணேசனும் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ்ரனும் அமைச்சின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தச் சந்திப்பின் போது அமைச்சு அலுவலகர்கள் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் இரண்டாம் அரசியல் செயலாளர் டொம் சொபர் ஆகியோரும் உடனிருந்தனர். 

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் செயற்பாடுகள், ஜெனீவாத் தீர்மான பொறிமுறைகளின் முன்னெடுப்புகள், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன என அமைச்சரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .