Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஜூலை 23 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அம்பாறை, கல்முனை, நீர்கொழும்பு, காலி ஆகிய பிரதேசங்களில், பொதுமக்களிடம் இருந்து 35 இலட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில், மதபோதகரையும் மற்றும் அவரது மனைவியையும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கும்படி, பாணந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
2013ஆம் ஆண்டு, அம்பாறை நவகம்புற பிரதேசத்தில் குறித்த மதபோதகர் தங்கியிருந்து, மத போதனையில் ஈடுபட்டுவந்த நிலையில், வியாபாரம் செய்வதாக, பலரிடம் பல இலட்சம் ரூபாய் பணத்தை வாங்கி, அவற்றைத் திருப்பிக் கொடுக்காமல், அங்கிருந்து தலைமறைவாகி, வேறு பிரதேசங்களுக்குச் சென்று, தொடர்ந்தும் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர்களிடம் பணத்தை கொடுத்து இழந்தவர்கள், பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்து, நீதிமன்றங்களிலும் வழக்குத் தாக்குல் செய்துள்ளனர்.
இதற்கமைய, கல்முனை, அம்பாறை, நீர்கொழும்பு, காலி ஆகிய நீதிமன்றங்களில், 11 நீதிமன்ற திறந்த பிடிவிறாந்து, இவர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் சரியான விலாசம் எவரிடமும் வழங்கப்படாமலும் சொந்த முகவரியில் தமது அலைபேசி எண்களைக் கூட பதிவு செய்யாமல், மிகவும் நுட்பமான முறையில், மதபோதகரும் அவரது மனைவியும், மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், தலைமறைவாகியுள்ள இவர்கள் தொடர்பாக, அம்பாறை தலைமையகப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, இவர்களின் பெயரில் வங்கிக் கணக்கொன்று இருப்பதைக் கண்டுபிடித்து, அதில் உள்ள சரியான முகவரியைத் தேடி, அம்பாறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகரும் வழக்கு தொடுநகர் பிரிவுப் பொறுப்பதிகாரியுமான வி. பிரகலாதாவன் தலைமையிலான குழுவினர், பாணந்துறை - வாதுவ பிரதேசத்திலுள்ள அவர்களது வீட்டில் வைத்து, மதபோதகரையும் அவரது மனைவியையும் நேற்று முன்தினம் கைதுசெய்து, பானந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவர்கள் இருவரையும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும், கல்முனை நீதிமன்றத்துக்கு எதிர்வரும் 27ஆம் திகதியும் காலி நீதிமன்றத்துக்கு ஓகஸ்ட் 5ஆம் திகதியும், வழக்கு உள்ள ஏனைய நீதிமன்றங்களில் குறித்த தினங்களில் ஆஜர்படுத்துமாறும், அம்பாறை தலைமையகப் பொலிஸாருக்கு, நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .