2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மேல் மாகாணத்தில் 3 நாட்களுக்கு டெங்கு ஒழிப்புத்திட்டம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 25 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 28ஆம் திகதியிலிருந்து தொடர்ந்து 3 தினங்களுக்கு நடைமுறைப்படுத்தும் வகையில், இந்த டெங்கு ஒழிப்புக்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

மேல் மாகாணத்தில் டெங்கு வலயங்களாக இனங்காணப்பட்ட கொழும்பு நகர சபைக்குட்பட்ட பகுதிகள், நுகேகொடை, கொலன்னாவை, வத்தளை, இரத்மலானை, தெஹிவளை, மஹரகம, ஜா-எல, நீர்கொழும்பு, மொரட்டுவ மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளிலேயே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக சுகாதாரத் துறையின் தொற்று நோய்ப்பிரிவுப் பணிப்பாளர் டாக்டர். பபா பலிஹவடன தெரிவித்தார். 

கடந்த 22 நாட்களுக்குள் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு  நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .