Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாண விவசாய நீர்ப்பாசன, காணி, கால்நடை உற்பத்தி, சுகாதார, மீன்பிடி மற்றும் விவசாய அபிவிருத்தி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விவசாய, பண்ணை உற்பத்தி கண்காட்சியை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன, ஹோமாகம வில்பிரட் சேனாநாயக்க விளையாட்டு மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (08) திறந்து வைத்தார்.
இன்றும் நாளையும் இடம்பெறும் இக்கண்காட்சி, மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்கள், இளைஞர் சமூகத்தினர், விவசாய சமூகத்தினர் மற்றும் மாகாணத்தில் உள்ள விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு விவசாயத்துறை தொடர்பான விளக்கங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் விவசாய வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்குமான நோக்கத்துடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
'ஆரோக்கியமான வாழ்வு - சமநிலையான உணவு வேளை' என்ற கருப்பொருளின் கீழ் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு உதவும் வகையில் இது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த பால் உற்பத்தி விவசாயிகளுக்கும் சிறந்த பண்ணை வளர்ப்பு தொழில் முயற்சியாளர்களுக்கும் இதன்போது ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன், முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, மேல் மாகாண விவசாய நீர்ப்பாசன, காணி, கால்நடை உற்பத்தி, சுகாதார, மீன்பிடி மற்றும் விவசாய அபிவிருத்தி அமைச்சர் காமினி திலக்கசிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
7 hours ago