2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மின்பாவனையாளர்களுக்காக ‘புதிய சட்டங்கள் வரும்’

Kogilavani   / 2017 மார்ச் 29 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனனி ஞானசேகரன்

மின்பாவனையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முகமாக, புதிதாக 11 சட்டங்களை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சாலிய மத்யூ தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த பாவனையாளர் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“மின்பாவனையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு புதிதாக 11 சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த சட்டவிதிகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, பாவனையாளர்களுடனான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும்.

இதன்போது பாவனையாளர்களால் சமர்ப்பிக்கப்படும் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டே, சட்டவிதிகள் தயாரிக்கப்படும்.

இதற்கமைய, திட்டமிட்ட மற்றும் திட்டமிடப்படாத மின்சாரத் தடங்கல்களுக்கானதும் மின்சார சேவைக்கணக்கின் பெயர் மாற்றுகை கட்டணச் சீட்டுப்பெறல், வளாகத்துள் நுழைதல் மின்மானி வாசிப்பு தொடர்பாக 11 விதிகள் மற்றும் வழிகாட்டிகள் தயாரிக்கப்பட்டு வௌியிடப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .