2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மாணவிகள் நிர்வாணத்தை காட்டிய சாரதிக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

16 வயதுடைய பாடசாலை மாணவிகள் ,ருவருக்கு  தனது நிர்வாணத்தை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த சாரதி ஒருவரை நீர்கொழும்பு மேலதிக நீதவான் திலகரத்ன பண்டார எதிர்வரும் 11 ஆம் திகதி   வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு  நேற்று (7) உத்தரவிட்டார்.

ஜா-எல, ஏக்கல, பீரிஸ்வத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த ரசிக்க குமார பெரேரா என்ற 36 வயதுடைய லொறி சாரதியே விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிடப்பட்டவராவார்.

இந்த மாணவிகள் .ருவரும் சீதுவைப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கற்பவர்களாவர்.
சம்பவம் இடம்பெற்ற அன்று இரு மாணவிகளும் ரத்தொழுகமை பிரதேசத்தில் உள்ள தனியார் தனியார் வகுப்பொன்றுக்கு; சென்று கொண்டிருக்கும் போது, லொறியொன்றைச் செலுத்தி வந்த  சந்தேக நபர், லொறியை நிறுத்திவிட்டு மாணவிகள் இருவரையும் குரல் எழுப்பி அழைத்து தனது நிர்வாணத்தைக் காட்டியுள்ளார் என வழக்கின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

இந்த வழக்கை நீதவான் எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .