Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட். ஷாஜஹான்
பாத யாத்திரை தொடர்பாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கும் வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து வடமேல் மாகாண சபை உறுப்பினரை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிடப்பட்டுள்ளார்.
மாகாண சபை உறுப்பினர், கடந்த 31ஆம் திகதி நிட்டம்புவையில் ஆரம்பமான பாத யாத்திரையில் பங்குபற்றி விட்டு தொடர்ந்து செல்ல முடியாமல் இடை நடுவில் தனது வீட்டை நோக்கிப் புறப்பட்டுள்ளார்.
வீடு வரும் வழியில் நீர்கொழும்பு குரணை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் தேனீர் அருந்தக் கொண்டிருக்கும் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் அங்கு வந்துள்ளார்.
பின்னர் இருவரும் உரையாடிக்கொண்டிருந்த போது, பிரதேச சபை உறுப்பினர், மாகாண சபை உறுப்பினரிடம் 'பாதயாத்திரையில் கூட்டம் குறைவுதானே' என்று கேட்டுள்ளார்.
அதனால் கோபமடைந்த மாகாண சபை உறுப்பினர் தனது தற்பாதுகாப்புத் துப்பாக்கியை எடுத்து பிரதேச சபை உறுப்பினரை தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து மாகாண சபை உறுப்பினர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago