2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

போராட்டத்துக்கு எதிர்க்கட்சி முஸ்தீபு

Freelancer   / 2022 மார்ச் 14 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக நாளை 15 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு போராட்டமொன்றை கொழும்பில் நடத்தவுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில், 
 
பொது மக்களின் தற்போதைய பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதிலும்,  அடுத்த மாதத்துக்குள் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு அரச தலைவருக்கு சவால் விடுப்பதிலுமே இந்த போராட்டம் கவனம் செலுத்தும் என அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு நிபுணர்கள் குழுவை வரவழைக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி தனது தீர்மானங்களை பிரதிபலிப்பதும் இன்னும் பல சிக்கல்களைத் தவிர்ப்பதற்கானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும் முக்கியம் எனவும் 
அவர்கள் திறமையான திட்டத்தை முன்வைத்தால், அரசாங்கத்துக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X