Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2017 ஜூலை 17 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீ.எம். முக்தார்
டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, பேருவளை சீனன்கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலையின் எஸ்.எம். ஜாபிர் ஹாஜியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் (15) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, மாகாண சபை உறுப்பினர்களான இப்திகார் ஜெமீல், பிரசன்ன சன்ஜீவ, முன்னாள் உறுப்பினர் எம்.எம்.எம். அம்ஜாத், முன்னாள் நகர பிதா மஸாஹிம் முஹம்மத், முன்னாள் பிரதேச சபைத் தலைவர் குஸ்மன் சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இதன்போது வீடு வீடாகச் சென்று டெங்கு பரிசோதனை மேற்கொண்டதோடு, மக்களை விழிப்பூட்டும் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
சீனன்கோட்டைப் பகுதியில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் வகையில் புகை விசிறும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த வேலைத்திட்டங்களில் முழுமையாக பங்குபற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான மாபெரும் கருத்தரங்கிலும் அமைச்சர் விசேட உரை நிகழ்த்தினார்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர்,
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 55 ஆயிரத்து 150 டெங்கு நோயாளர்களே பதிவாகியுள்ளனர். எனினும், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்றுக் காரணமாக 269 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
டெங்கு தொற்றுா் பரப்பும் நுளம்புகள் பெருக்கத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, டெங்கு தொற்றுக் கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என்றார்.
மேலும், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு பொதுமக்கள் வழங்கும் பூரண ஒத்துழைப்பு குறித்தும் அமைச்சர் ராஜித சேனாரத்த இதன்போது நன்றி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago