Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உபயோகித்த தேங்காய் எண்ணெய் அடைக்கப்பட்டிருந்த 100 பரல்களையும், இரசாயனப் பொருட்களை அடைக்கும் 25 கொள்கலன்களில் நிரப்பப்படவிருந்த தேங்காய் எண்ணெய் பரல்களையும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் இன்று (10) கைப்பற்றினர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த அதிகாரிகள், அந்தப் பிரதேசத்தைச் சுற்றிவளைத்துத் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டபோதே, இந்தச் சட்டவிரோத வியாபார நடவடிக்கையைக் கண்டுபிடித்தனர்.
பயன்படுத்திய தேங்காய் எண்ணெய், நுகர்வோரின் பாவனைக்கு வழங்காமல், வேறு பாவனைக்கே விற்கப்படுவதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், அதிகாரிகளிடம் தெரிவித்த போதும், அதற்கான எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லையென, சுற்றிவளைப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், மனித பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட இரசாயனப் பதார்த்தங்களை அடைக்கும் கொள்கலன்களில், தேங்காய் எண்ணெய்யை நிரப்புவதற்குத் தயார்நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
3 hours ago