Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 07 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-யொஷான் பெரேரா
“சில உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, மாநகர அபிவிருத்தித் திட்டத்தைச் செயற்படக்கூடிய புதிய நிர்வாக கட்டமைப்புத் தொடர்பில் அரசாங்கம் சிந்தித்து வருகிறது. இவை, தேசிய கட்டமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும்“ என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெவித்தார்.
கொழும்பில் இன்று (06) நடைபெற்ற சிற்றிநெட் காங்கிரஸின் திறப்பு விழாவின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பொதுவான நீர் விநியோகம், கழிவு நீரகற்றல் போன்ற சேவைகளை வழங்க, பொதுவான உட்கட்டமைப்புகளையிட்டு நாம் சிந்திக்கலாம்.
“நாம், மேல் மாகாண சபையுடன் வேலை செய்யலாம். பின்னர் தேசிய கொள்கைகளுக்கு அமைய, வெவ்வேறு உள்ளூராட்சி மன்றங்களால் நிர்வாகம் செய்யப்படலாம்.
“மாகாண சபைகள், கல்வி, சுகாதாரம் போன்றவற்றைக் கவனிக்கும் வேளையில், உள்ளூராட்சி மன்றங்கள் தேசிய கொள்கைகளுக்கு அமைய அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளும். இந்தக் கொள்கைக் கட்டமைப்பு, மேல் மாகாண சபையுடன் கலந்து பேசி உருவாக்கப்படும். நாம், ஒன்றிணைந்த மாநகர நிர்வாகத்தில் இருந்து விடுபட்டு, பல சிறு அலகுகளின் நிர்வாகத்துக்கு மாறவுள்ளோம்.
“இணையக் கூட்டில், சகல சேவைகளும் தனித்தனியாகச் செயற்படும். மாநகர சபைகள், மக்கள் தொடர்பான அன்றாடத் தீர்மானங்களை எடுக்கும். நாம், அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான எமது சிந்தனை இதுவாகும். நகரங்களை நிர்வகிக்க, புதிய வழிகளை நாம் தேடுகின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
29 minute ago
36 minute ago