Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஜூலை 13 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
டெங்கு நுளம்புகளை அழிக்கும் வகையிலான புகை விசுறும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று, நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில், குறித்த பரிசோதகரால், நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம், போலவலான - கந்துருகஸ் சந்தியில் கடந்த திங்கட்கிழமை (10) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. டப்ளியூ.எம்.வி.எஸ்.ஏ.வர்ணகுலசூரிய என்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கே , இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மாநகர சபை ஊழியர்களைப் பயன்படுத்தி, டெங்கு நுளம்புகளை அழிக்கும் வகையில், போலவலான பிரதேசத்தில், புகை விசிறும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, நீர்கொழும்பு மாநகர சபையில் ஊழியராகப் பணியாற்றும் துஷான் கிஸ்மாந்த் என்பவர், குறித்த பரிசோதகருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர், பொலிஸ் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட அதிகாரி கூறியதாவது,
“சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அச்சுறுத்தல் விடுத்தார். நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரான தயான் லன்சாவின் சாரதி என, அவர் தன்னை அறிமுகம் செய்துவிட்டே, அவர் இந்த அச்சுறுத்தலை விடுத்தார்.
“மறுநாள் செவ்வாய்க்கிழமையும் (11) எனக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இன்னும் ஒரு மாத காலத்தில், என் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் எனவும் அச்சுறுத்தினார்.
“இது தொடர்பாக, பிரதி அமைச்சர் நிமல் லன்ஸாவிடம் கூறியுள்ளேன். பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago