Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் சியால்கோட் பகுதியில் கலகக் கும்பலால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, 2021 டிசெம்பர் 03ஆம் திகதி கொலை செய்யப்பட்ட தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் 2021 டிசெம்பர் 06ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக அரச செலவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவரது அடுத்த நிலை உறவினர்களால் சடலம் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த விடயத்தை வெளிநாட்டு அமைச்சு ஒருங்கிணைத்து வருகின்றதென அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் மரணம் தொடர்பிலான விசாரணை அறிக்கை ஒன்றை வழங்குமாறு இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளது.
இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் இறந்தவரின் தொழில் தருனருடன் வெளிநாட்டு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றது என்றும்
வெளிநாட்டு அமைச்சு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago