Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 26 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கணக்கு வழக்குகளைப் பேணும் அரச வங்கியொன்றின் வங்கிக் கணக்கிலிருந்து 4 கோடி ரூபாய்க்கு அண்மித்த தொகையை அவ்வப்போது மோசடி செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிரதமருக்கு அருகிலிருந்து கடமையாற்றியவரே இவ்வாறு செய்துள்ளார். இவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. என அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த அதிகாரி, பிரதமரின் ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தியே இவ்வாறு பணத்தை அவ்வப்போது மோசடி செய்து எடுத்துள்ளார் என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த கணக்கில் இருந்த நிலுவை, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், சம்பளமாக பெற்ற பணம் என்பதுடன், அந்தக் கணக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்தே, அப்பணம் தொடர்பில் பரிசோதிக்கப்பட்டது. அதன் பின்னரே மேற்படி விவகாரம் அம்பலமானது.
பிரதமரின் கணக்கு வழக்கில் இருந்து பிரதமருக்கு மிக அருகில் இருந்த அதிகாரியே இவ்வாறு எடுத்துள்ளார். அந்த அதிகாரி, பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். பல சந்தர்ப்பங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பான செயலாளராகவும் இருந்துள்ளார்.
அமைச்சுப் பதவிகள் பலவற்றை வகித்த, பாராளுமன்றத்தில் சபாநாயகர் இருந்து. அண்மையில் மரணித்த அரசியல் தலைவரின் மகனே, பிரதமருக்கு அருகில் பணியாற்றியுள்ளார்.
இந்த மோசடி அம்பலமானதை அடுத்து, பிரதமர் தொடர்பில் அவர் வகித்த சகல பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அத்துடன், பண மோசடி தொடர்பில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவித்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .