Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் , பயணச் சீட்டுகளை வழங்காத நடத்துநர்களிடமிருந்து 58,750 ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
பயணச் சீட்டுகளை விநியோகிக்காத நடத்துநர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், பிரயாணிகளிடமிருந்து பணம் பெற்றும் பயணச் சீட்டுகளை வழங்காத 235 நடத்துநர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களிடமிருந்தே மேற்படி அபராதத்தொகை அறவிடப்பட்டுள்ளதாக அதிகார சபை அறிவித்துள்ளது.
இவர்களில் ஒருவரிடமிருந்து தலா 250 ரூபாய் வீதம் 58,750 ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக, மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துசித்த குலரத்ன தெரிவித்தார்.
புறக்கோட்டை, தெமட்டகொடை, கொலன்னாவ, நாராஹேன்பிட்டி, மட்டக்குளி, முகத்துவாரம், இராஜகிரி, நுகேகொடை, கொஹுவலை, கடுவெல, அவிசாவளை, தெஹிவளை, கல்கிஸை, இரத்மலானை, மஹரகம, ஹோமாகம மற்றும் கொட்டாவ ஆகிய பிரதேசங்களில், 699 தனியார் பஸ்களில், எட்டு பரிசோதனை குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனை நடவடிக்கைகளின்போதே, இந்த அபராதத் தொகையை அறவிட முடிந்ததாக, அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜகத் பெரேரா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago