2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பல்கலைக்கழகங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேலைத்திட்டம்

Princiya Dixci   / 2016 ஜூன் 02 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல்கலைக்கழகங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் திட்டமிட்ட ரீதியிலான வேலைத்திட்டமொன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (02) இடம்பெற்ற ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் 2015ஆம் ஆண்டின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் இலவசக் கல்விக்கொள்கை மற்றும் அதன் வேலைத்திட்டம் தொடர்பாக பெருமளவு விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதிலும் உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளைவிட தரமான கல்வி எமது நாட்டில் காணப்படுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு அரசும் ஆண்டுதோறும் இலவசக் கல்வியைப் பலப்படுத்துவதற்காகவும் இதில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் வளங்களை ஒதுக்கி அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டுள்ளதாகவும், அன்று தொடக்கம் இன்று வரை நாட்டுக்குக் கிடைக்கப்பெற்றுள்ள இலவசக் கல்வியின் நன்மைகள் தொடர்பாக மகிழ்ச்சியடைய முடியுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதியுயர் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிப் பயணிக்கும் உலகை வெற்றிகொள்வதற்கு நாட்டு மக்கள் கல்வியிலும் அறிவிலும் பூரணத்துவம் அடைய வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனநாயக வழியில் வாழ்வதற்கான சுய தீர்மானம் மேற்கொள்ளத் தேவையான அறிவினை மனிதனுக்கு வழங்குதல் கல்வியின் பொறுப்பாக உள்ளதெனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .