Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 21 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நாட்டில் பல்கலைக்கழக கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான புதிய செயற்திட்டங்களுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவமும் மறுசீரமைக்கப்படவேண்டிய தேவையுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற இலங்கை தென்கிழக்குப் பல்கலைகழகத்தின் 2016ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாபதிபதி இதனைத் தெரிவித்தார்.
இன்றைப் பார்க்கிலும் ஒரு சிறந்த நாளையை எமது நாட்டின் எதிர்கால தலைமுறைக்கு வழங்கி சர்வதேச ரீதியில் நடைபெறும் போட்டிகளுக்கு சிறப்பாக முகம்கொடுக்கும் வகையில் இந்நாட்டின் பல்கலைக்கழகக் கல்வி மற்றும் பாடசாலைக் கல்வித் துறைக்குத் தேவையான சகல வசதிகளையும் குறைவின்றி பெற்றுக்கொடுத்து கல்வித் துறையை பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
30 minute ago
30 minute ago