Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 12 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு, படல்கமை பிரதேசத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் அண்மையில் மரணமானமை தொடர்பாக இன்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், சிறுவன் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சிறுவனின் தந்தை மற்றும் பாட்டி ஆகியோரை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அமைந்துள்ள சட்ட வைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்கு இன்று(12) அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி திலகரத்ன பண்டா விசாரணை நடத்தினார் .
படல்கமை பொலிஸ் பிரிவில் ஆடிமுல்ல கட்டானை பிரதேசத்தை சேர்ந்த 10 வயது சிறுவனே மரணமானதுடன், சிறுவனின் மரணம் தொடர்பில் சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிறுவனின் தாயார் 18 ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
குறித்த சிறுவன் கடந்த 7ஆம் திகதி திங்கட்கிழமை வீட்டில் வைத்து மரணமாகியுள்ளார்.
அந்த சிறுவனுக்கு காய்ச்சல் இருமல், சளி ஆகிய நோய் அறிகுறிகள் இருந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சிறுவனின் மரணம் தொடர்பாக பொலிஸாருக்கு மற்றும் அயலவர்களுக்கு தெரிவிக்காமல், சுகயீனமடைந்த சிறுவனை வீட்டில் வைத்து தமது மத வழிபாட்டுக்கு அமைய பிரார்த்தனை செய்து வந்ததாக பெற்றோர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுவனின் தாயாரை மனநல வைத்தியர் ஒருவரிடம் காண்பித்து மன்றில் அறிக்கை சம்ர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி திலகரத்ன பண்டா உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago