Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Gavitha / 2016 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தத்தின்போது நாட்டுக்காக உயிர் நீத்த படைவீரர்களுக்கும் யுத்த களத்தில் காயமடைந்த படைவீரர்களுக்குமாக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் படைவீரர்களிடம் கையளித்தார்.
குறித்த வீடுளுக்கான திறப்புக்களை, ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வீட்டு உரிமையாளர்களிடம் ஜனாதிபதி கையளித்தார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு இணங்க, படைவீரர்களுக்காக சகல வசதிகளும் கொண்ட வீடுகளை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு 35 வீடுகள் படைவீரர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளின் திறப்புகளை ஜனாதிபதி படைவீரர்களிடமும் உயிர் நீத்த படைவீரர்களின் உறவினர்களிடமும் கையளித்தார்.
வீட்டு உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்கால தேவைகள் என்பன கருத்திற்கொள்ளப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளுக்கான உடல் உழைப்பு, குறித்த வீட்டு உரிமையாளரான படைவீரர் உள்ளடங்கும் படையணியினரினால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒட்டுமொத்த செலவு தற்போது சேவையில் உள்ள படைவீரர்களினால் ரணவிரு வீடமைப்பு நிதியத்துக்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்தும் படையணியின் நிதியத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இராணுவத் தளபதி லெப்டினன் கிரிஷாந்த த சில்வா உள்ளிட்ட படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago