Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Gavitha / 2016 மே 02 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் பாலாவி விமான நிலையத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
'புத்தளம் பாலாவியிலுள்ள விமான நிலையத்தை உள்ளளூர் விமான போக்குவரத்துக்காக விஸ்தரிக்கப்பதற்கும் அபிவிருத்திகளை மேற்கொள்;வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடலொன்று அண்மையில் புத்தளம் மாவட்ட செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பாலாவி விமான நிலையத்தை நவீன மயப்படுத்துவது தொடர்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
குறித்த விமான நிலையத்திலிருந்து 20பேர் பயணிக்கக் கூடிய வகையிலான விமானத்தை சேவiயில் ஈடுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தளத்திலிருந்து வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு மக்கள் பயணிப்பது மாத்திரமின்றி, சுற்றுலா பயணிகளுக்கும் புத்தளத்துக்கு வந்து பயணம் மேற்கொள்வதற்கும் வசதியாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம்' என்று அவர் கூறினார்.
'அத்;துடன், அநுராதபுரம், தம்புள்ள உட்பட வடபகுதிகளுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மக்களை கவரும் வகையில், புத்தளம் நகரத்தை நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புத்தளத்தில் ஆனமடுவப் பிரதேசத்தில் பௌத்த கோவிலும் கற்பிட்டி தலவில பிரதேசத்தில் கிறிஸ்தல தேவாலயமும், சிலாபத்தில் முன்னேஸ்வரக் கோயிலும், புத்தளம் நகரில் பழமைவாய்ந்த பெரிய பள்ளிவாயலும் உள்ளது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் இலகுவில் பார்வையிடுவதற்காகவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, புத்தளம் நகரிலுள்ள கொழும்பு திடல் மேலும் அழகுபடுத்தப்படவுள்ளதாகவும் அந்தப்பிரதேசத்தில் உல்லாச படகு சேவைகளையும் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago