Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பார்பர் வீதி விவகாரத்தை கொழும்பு மாநர முஸ்லிம் சமூக தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளதாக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மத்திய கொழும்பின் பார்பர் வீதி என்ற மகாவித்தியாலய மாவத்தையின் 36ம் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து கோவிலின் தேர்த்திருவிழா இடைநிறுத்தம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை இன்று இந்த குறிப்பிட்ட மகாவித்தியாலய மாவத்தை பிரச்சினை என்ற நிலைமாறி, ஒரு தேசிய பிரச்சினையாக உருமாறி வருகிறது. இந்நிலைமை நாட்டுக்கு உகந்ததல்ல.
'இத்தகைய சூழலில் நாம் ஏட்டிக்கு போட்டியாக செயற்பட கூடாது. எனவே இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கும் பொறுப்பை நான் தற்போது கொழும்பு மாநகர முஸ்லிம் சமூக தலைவர்களிடம் விட்டுள்ளேன். இதுவே கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் இன, மதங்களுக்கிடைய தேசிய சகவாழ்வுக்கு பொறுப்பான தேசிய கலந்துரையாடல் துறை அமைச்சரவை அமைச்சர் என்ற முறையிலும் தற்போது நான் எடுக்க கூடிய பொறுப்புள்ள நிலைப்பாடு இதுவென நான் எண்ணுகிறேன்' என்றும் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் இஸ்லாமிய மத தலைவர்களிடம் கலந்து பசி முடிவெடுத்து இந்த தேர்த்திருவிழாவை அனைவரும் இணைந்து நடத்தி நல்லிணக்க சகவாழ்வு சூழலை உருவாக்கி தரும்படி அமைச்சர் பைசர் முஸ்தபா, ராஜாங்க அமைச்சர் பௌசி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மேயர் முசம்மில் மற்றும் நல்லிணக்க இயக்க தலைவர் நாஜா முஹம்மத் ஆகியோரிடம் கோரியுள்ளேன் எனவும் அவர் கூறினார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பல மதங்கள், பல இனங்கள் வாழும் இந்நாட்டில் பொலிஸ்; பாதுகாப்புடன் மத விழாக்களை நடத்த முடியாது. இந்;த தோட்டத்தில் உருவாகியுள்ள இச்சூழல், நாட்டின் தேசிய நல்லிணக்கத்துக்கும் சகவாழ்வுக்கும் ஊறு விளைவிக்கின்றது. கடந்த காலங்களில் இந்நாட்டிலே கோவில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆகியவற்றுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சம்பவங்களை ஞாபகப்படுத்துகிறது.
மீண்டும் நாம் இருண்ட காலத்துக்கு உள்ளே போக விரும்புகிறோமா அல்லது முன்னோக்கி நகர போகிறோமா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். இன்றைய இந்த சூழல் கடந்த காலங்களில் பள்ளிவாசல் தகர்ப்புகளுக்கு எதிராக முன்னின்று போராடிய என் மனதை ஏற்கனவே காயப்படுத்தி உள்ளது என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
ஏட்டிக்கு போட்டியாக திருவிழா நடத்தலாம். அது நிச்சயமாக முடியும். ஆனால், அது நல்லிணக்கத்துக்கு உகந்தது அல்ல. அது நிரந்தர தீர்வும் அல்ல. அதேவேளை இந்த சட்டவிரோத மற்றும் மத நல்லிணக்க விரோத செயல்களுக்கு மிகப்பெருவாரியான முஸ்லிம் மக்களும் இஸ்லாமிய தலைவர்களும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் தெரிவித்து வருகிறார்கள் என்பதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
எனவே திருவிழா எந்த வித தடையும் இன்றி நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும். தலைநகரில் அமைதி நிலவ வேண்டும் என்பதிலும் மத சுதந்திரம் நிலவ வேண்டும் என்பதிலும் எனக்குள்ள அக்கறையையும் பொறுப்பையையும் எவரும் குறைத்து மதிப்பிட்டு விடகூடாது. இதை மனதில் நிறுத்திக்கொண்டு இந்நாட்டில், குறிப்பாக தலைநகரில் நாம் செயற்பட வேண்டும்' என்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago