Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
'பாபர் வீதி ஆலயத்தின் தேர் திருவிழாவை அங்கே வசிக்கும் முஸ்லிம்கள் தடுத்து நிறுத்தியது கண்டனத்துக்குரியது. வெறுமனே இன நல்லிணக்கம் என்ற அடிப்படையில் இப்பிரச்சினைக்கு முடிவு காணாமல் பேச்சுவார்த்தை என்ற பெயரில் தேர்திருவிழாவை தள்ளிப் போட முற்படுவது இன்றைய அரசியல்வாதிகளின் கையாளாகாத்தனத்தை காட்டுகிறது' என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
கடந்த ஆண்டு இவ் ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெறவிருந்தபோது, இதே எதிர்ப்புகளை அப்பகுதியிலிருந்த முஸ்லிம் இளைஞர்கள் வெளிப்படுத்தியதாக ஆலய நிர்வாகத்தினர் என்னிடம் முறையிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் கொட்டாஞ்சேனை பொலிஸ் மூலமாக முழுமையான பாதுகாப்பு வழங்கி, திருவிழாவை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன். ஆனால் இவ்வருடம் இத்திருவிழாவை நடத்த முடியாத அளவுக்கு இன்றைய மக்கள் பிரதிநிதிகள் கையாளாகாத்தனமாக உள்ளனர்;.
கடந்த அரசாங்கத்தினால் கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் ஆலயம் அகற்றப்பட்ட பொழுது வெறும் அரச எதிர்ப்பு விமர்சனங்களை செய்தவர்கள் இன்று தங்களது ஆட்சியில் அதனை மீண்டும் கட்டிக்கொடுப்பதற்கு அக்கறை எடுக்காமரல் இருக்கின்றார்கள். இதிலிருந்து வெறும் அரசியல் விளம்பரத்தையே இவர்கள் பெற்றுக் கொண்டு வந்தார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பாபர் வீதி ஆலய தேர்திருவிழாவையாவது நடத்திக் காட்ட வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் இவ்வாலய விடயத்தை ஊடகங்கள் மூலம் பெரிதுபடுத்தப்பட்டிருக்கின்றது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அப்படியானால் உடனடியாக இவ்வாலய திருவிழாவை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லிம் மக்களிடம் பேசி ஏன் இவரால் இத்தேர்திருவிழாவை நடத்த முடியவில்லை.
சிறுபான்மை மக்கள் மத்தியிலே இப்படியான பிளவுகள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
முஜிபுர் ரஹூமான் வெறும் இன நல்லிணக்க வார்த்தைகளை பேசி நாடகமாடுகின்றார். இந்து தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளையே இவர் மேற்கொண்டு வருகின்றார். இதனை இவரது கட்சியிலுள்ள தமிழ் அமைச்சர்களும் கட்சி நலனைக் கருத்திற் கொண்டு வாய் மூடியிருப்பது வேடிக்கையாக இருக்கின்றதது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago