2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

புதையல் தோண்டிய 11 பேர் கைது

Princiya Dixci   / 2016 நவம்பர் 15 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், பொல்பிடிகம, மாபேகமுவப் பகுதியில் தனியார் காணியொன்றில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த 11 பேர், பொல்பிட்டிகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தரும் உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல் பொலிஸ் நிலையத்தில் கடமைபுரிந்த பொலிஸ் சார்ஜன் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .