2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

போதைப்பொருளுக்கு எதிரான சர்வதேச தின நிகழ்வு

Princiya Dixci   / 2016 ஜூன் 27 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச போதைப்பொருளுக்கு எதிரான தினத்தையொட்டி  போதைப்பொருளில் 'இருந்து விடுதலைபெற்ற நாடு கீர்த்திமிகு நாளை' என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் நேற்று (26) ஒழுங்குசெய்யப்பட்ட போதைப்பொருளுக்கு எதிரான தின நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

2016 சர்வதேச போதைப்பொருளுக்கு எதிரான தினத்தையொட்டி தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு தின முத்திரை இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் சமூக அதிகாரிகள் 1,000 பேர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் ஜனாதிபதியினால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பேராசிரியர் ரவீந்திர பெர்னாந்துவினால் போதைப்பொருளுக்கு எதிரான தேசியக் கொள்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

சங்கைக்குரிய தீனியாவல பாலித நாயக தேரர், அமைச்சர் சாகல ரத்நாயக, ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கே. கமதே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .