2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பொதுநலவாய மருத்துவர் சங்க மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 15 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் பொதுநலவாய மருத்துவர் சங்கத்தின் 24ஆவது மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேனவின்; தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

'ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்வுக்கும் டிஜிட்ல் தொழிநுட்பம்' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இம்மாநாட்டுக்கான உபசரிப்பு நாடாக இலங்கை விளங்குகின்றது.

இம்மாநாடு முதன்முறையாக 1962ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றுள்ளதுடன், 2013ஆம் ஆண்டு ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராகவிருந்த போது முன்வைத்த வேண்டுகோளின் பேரில் 54 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இலங்கையில் நடைபெறுகிறது.

'ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்வுக்கும் டிஜிடல் தொழிநுட்பம்' என்ற இம்மாநாட்டுக்கான  கருப்பொருள் காலத்துக்கேற்ற ஒன்றாகும். இதன் மூலம் சுகாதாரத் துறையின் வினைத்திறன் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கும் என்று அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .