2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பெண்களின் நகைகளைக் கொள்ளையிட்டவர் கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு, கட்டானை, கட்டுநாயக்க மற்றும் ரத்தொழுகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் தொழிலுக்குச் செல்லும் மற்றும் பாதையில் பயணிக்கும் பெண்களின் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய தங்க நகைகளைப் பறித்த 'கியர் தொலஹா' என்றழைக்கப்படும் நபரை, ரத்தொழுகமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தாகொன்னை பிரதேசத்தைச் சேர்ந்த ரசிக்க சமிந்த (வயது 38) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

கைதுசெய்யப்பட்ட நபரை, நீர்கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (08) ஆஜர்படுத்தியபோது, அவரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபர், பல்வேறு பிரதேசங்களிலும் தொழிலுக்கு செல்லும் மற்றும் பாதையில் பயணிக்கும் பெண்களின் தங்கச்சங்கிலிகளையும் வளையலகளையும் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் அதிவேக மோட்டார் சைக்கிளில் சென்று பறித்துள்ளதுடன், அந்த மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி  பல்வேறு பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக மதுபான விநியோகத்திலும் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி அடகு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய நகைகளை மீட்க  நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .