2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானின் 50ஆவது பாதுகாப்பு தினம்

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் 50ஆவது பாதுகாப்பு தினம் கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இத்தினமானது 1965ஆம் ஆண்டு யுத்தத்தில் உயிர்நீத்த பாகிஸ்தானிய இராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவு கூருமுகமாக கொண்டாடப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராணுவ தளபதி உட்பட பாதுகாப்பு துறையின் அதிகாரிகள் பல்வேறு நாட்டின் தூதுவர்கள், இலங்கை பாதுகாப்பு பிரிவின் படைவீரர்கள், அரச அதிகாரிகள் உட்பட பாகிஸ்தானிய சமூகத்தினர் இந் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

பாகிஸ்தானிய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ராஜில் இர்ஸாட் காஹான் அவர்களினால் வரவேற்பு உரை இரு நாட்டு தேசிய கீதங்களின் பின்னர் வாசிக்கப்பட்டது.

பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) சையத் சகில் ஹிசைன் அவர்களால் பாகிஸ்தானிய ஜனாதிபதி மஹ்நூன் ஹிசைன் அவர்களின் செய்தி வாசிக்கப்பட்டது.

“பாகிஸ்தான் என்பது சமாதானத்தை ஆதரிக்கும் தேசம் பிராந்தியத்தின் சமாதானத்தையே அது  விரும்புகின்றது. இருப்பினும் இவ் எண்ணக் கருவினை அதன்  பலவீனமென கருதுவது தவறு” என ஜனாதிபதி தனது செய்தியிலே கூறியிருந்தார்.
 
“பாகிஸ்தானிய தேசம் மற்றும் அதன் இறைமையினை பாதுகாப்பதற்கு இராணுவ வீரர்கள்  எல்லையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றனர். 

மேலும் 1965ஆம் ஆண்டில் கற்றுக் கொண்ட பாடங்கள் ஒற்றுமை, ஒருமைப்பாடு, அர்ப்பணிப்பு, ஊக்கம் தியாகம் அனைத்தும் ஒன்றிணைந்தால் வலுவான தேசத்தினையும் சிறந்த பாதுகாப்பு பிரிவினையும் உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தது” என பாகிஸ்தானிய ஜனாதிபதியின் செய்தியிலே குறிப்பிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தானிய பாதுகாப்பு படை கடமையுணர்வுடனும் வலிமையுடனும் நவீன யுகத்திற்கு ஏற்ற  போர்வீரர்களாக நாட்டின் இறையாண்மைக்காக தம்மை அர்ப்பணித்து வருகின்றனர். வெளி மற்றும் உள் நாட்டு ஆக்கிரமிப்புக்களை மிகவும் சிறந்த முறையில் எதிர்கொள்வதுடன் எதிரிகளின் திட்டங்களை நுணுக்கத்துடன் முறியடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானிய தேசமானது தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுதிரண்டுள்ளதுள்ளதுடன் அதன் இராணுவ படைகளுக்கு நிகராக, சிவில் மற்றும் பாதுகாப்பு படைகள் தாய் நாட்டை பாதுகாக்க மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

'சார் ஈ அஸ்ப்' திட்டம் பாகிஸ்தானிய இராணுவத்தினரால் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை நாட்டின் இறையான்மைக்கு எவ்வித தீங்கு ஏற்பட்டாலும் அது முறியடிக்கப்படும் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது என பாகிஸ்தானிய ஜனாதிபதியின் உரையிலே குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் உரையினை வாசித்த பின்னர் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) சையத் சகில் ஹிசைன் அவர்கள் நிகழ்விற்கு சமூகமளித்தவர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்தார்.
 
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராணுவ தளபதி உட்பட பாதுகாப்பு துறையின் அதிகாரிகள்  தூதுவர்கள், அரச அதிகாரிகள் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) சையத் சகில் ஹிசைன் ஆகியோரால் பாதுகாப்பு தின கேக் வெட்டப்பட்டது.

1965இல் நாட்டிற்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவு கூருமுகமாக பாகிஸ்தானிய தேசத்தின் பாதுகாப்பு தினமானது ஆண்டுதோறும் செப்டெம்பர் 6ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .