Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Freelancer / 2022 ஜூன் 21 , மு.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
கோட்டா - ரணில் அரசாங்கம் பதவி விலகி, பொதுவான வேலைத் திட்டத்தின் கீழ் இயங்குவதற்கான சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கம் அடுத்த தேர்தல் வரையில் செயற்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இலங்கை தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்க்கும்போது நாடு சோமாலியா, சூடான் நிலைக்கு சென்றுவிட்டதாக எனவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (20) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை கீழ் மட்டத்திற்கு தள்ளியவர் வேறு எவரும் கிடையாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவே இதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாட்டை கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு மாதங்களுக்கு மேலாகியும் நாட்டை கட்டி எழுப்புவதற்கான எந்தவொரு வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
2020 டிசம்பர் மாதம் அளவிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என நாம் எச்சரித்து இருந்தோம். எனினும் இதன்போது ஆளும் தரப்பினர் சிரித்தார்கள். ஆனால், நாட்டை கட்டியெழுப்ப முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளி விட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
49 minute ago
55 minute ago
59 minute ago