Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நாட்டிலுள்ள அனைந்து அரச மற்றும் தனியார் மருந்தகங்கள் இன்று (02)திறக்கப்பட்டதையடுத்து, ஓய்வூதியம் பெறுவோரும் ஏனையோரும் மருந்தகங்களுக்குச் சென்று தமக்குத் தேவையான மருந்துக்களைப் பெற்றுக்கொண்டனர்.
நாட்டிலுள்ள அனைந்து அரச மற்றும் தனியார் மருந்தகங்கள் இன்றும் நாளையும் எதிர்வரும் திங்கட்கிழமையும் திறக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஊரடங்கு அமுலாகும் நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் வியாபாரிகள் சிலர் பொலிஸ் அனுமதி பெற்று வாகனங்களில் வந்து வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பதை ஆங்காங்கே காண முடிந்தது.
இதேவேளை, கொவிட் 19 வைரஸ் தொற்றினால் மரணமான முஹம்மத் ஜமாலின் மரணத்தை தொடர்ந்து நீர்கொழும்பு கொச்சிக்கடை போருதொட்ட பிரதேசத்தில் ஆப்தீன் மாவத்தை இன்று நான்காவது நாளாக முடக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை பலகத்துறை ஜும்மா பள்ளிவாசல் நிருவாகம் மேற்கொண்டுள்ளதாக பள்ளிவாசலின் நிருவாக சபைத் தலைவர் எம்.எஸ்.எம். ரிஸ்வி தெரிவித்தார்.
பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள 'போருதொட்ட சதக்கா பவுண்டேசன்' என்ற அமைப்பின் மூலமாக உதவிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தனவந்தரக்ள, நலன்விரும்பிகள் இதற்காக தாராளமனதோடு உதவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago