2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நீர்கொழும்பு சிறையிலிருந்து தப்பியோடிய மூவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.சாஜஹான்

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நேற்று(06)  நள்ளிரவு 12.10 மணியளவில் தப்பியோடிய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டத்தை மீறிய சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்தே, இந்த கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  கைதிகளே, இவ்வாறு தப்பியோடியுள்ளனர். இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறையில் துளைகளையிட்டு தப்பியோடியுள்ளனர்.

சம்பவத்தை அறிந்த சிறைக்காவலர்கள் பொலிஸார் மறறும் விமானப் படையினர், நீர்கொழும்பு சிறைச்சாலை அருகில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான கொட்டுவை மைதானத்தில்; மறைந்திருந்த இரண்டு  கைதிகளையும்கைதுசெய்துள்ளனர்.

மற்றைய சந்தேகநபர் நீர்கொழும்பு கடோல்கலே பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் மறைந்திருந்தபோது, இன்று  அதிகாலை (07) கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதிகளில் இருவர் நீர்கொழும்பையும் மற்றைய கைதி  திவுலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X