2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பில் பதற்றம்

Editorial   / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷாஜஹான்

நீர்கொழும்பு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் டீசலுக்கு  தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் விநியோகிக்கப்பட்டது.

இதன்காரணமாக அங்கு  நீண்ட வரிசை காணப்பட்டது. டீசலை பெற்றுக்கொள்வதற்காக அதிக எண்ணிக்கையானோர் கலன்களை எடுத்து வந்திருந்தனர். வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்றிருந்தன.   

 எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக அங்கு இருந்தவர்களிடம் முகாமையாளர்  கூறியதை அடுத்தே, முகாமையாளருக்கும். எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக கலன்களுடன்  வந்தவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. 

பின்னர் அங்கு சுமூக நிலையை ஏற்பட்டது. பின்னர் மீண்டும்  டீசல் விநியோகிக்கப்பட்டது.நீர்கொழும்பு போக்குவரத்து பொலிஸார் நீண்ட வரிசையில் நின்ற வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X