Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 24 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லாட்சியின் வரவு - செலவுத்திட்டத்தில் மக்களுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள நன்மைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண்.குகவரதன், தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் வதிவிடப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியிலிருந்து நாடு விடுவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சியின் வரவு - செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதோடு கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. மக்களின் வாழ்க்கைச்சுமை குறையும்போது தான், நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களால் பங்களிப்பு வழங்க முடியும்.
கொழும்பு, மலையகத்தில் பாரிய பிரச்சினையான மக்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு காலமும் சம்பள உயர்வின் போது அரச துறையினரே கவனத்தில் கொள்ளப்பட்டனர். இம்முறை தனியார் துறை ஊழியர் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளமை நல்லாட்சியின் சிறப்பான முன்னுதாரணமாகும்.
பொருளாதார ரீதியில் அபிவிருத்தி காண்பது போன்று ஏனைய தேசியப் பிரச்சினைகளின் தீர்வுக்கும் அரசு முன்னுரிமை வழங்கவேண்டும். வட மாகாண மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் சுதந்திரமான அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
நல்லாட்சியில் அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடு என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago