Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் நீர்கொழும்பு கல்வி வலய தமிழ் மொழிப் பாடசாலைகளில் 28 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்.
விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் 21 மாணவர்களும் அல்பலாஹ் முஸ்லிம் வித்தியாலயத்தில் நான்கு மாணவர்களும் அல்- ஹிலால் மத்தியக் கல்லூரியில் மூன்று மாணவர்களும் சித்தியடைந்திருப்பதாக அந்தப் பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர்.
விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் மூன்று மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளனர்.
இப்பாடசாலையைச் சேர்ந்த என்.நிருவதன் 187 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தையும் எப்.ஆயிஸா 180 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாமிடத்தையும் ஆர்.சபீஸன் 179 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமைத் தேடிந்தந்துள்ளனர்.
அல்-ஹிலால் மத்தியக் கல்லூரியில் ஜன்ஸிர் சஹ்தா என்ற மாணவி 175 புள்ளிகளைப் பெற்று, பாடசாலையில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago