2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நித்திரைக்குச் சென்ற கான்ஸ்டபிள் இடைநிறுத்தம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.இஸட். ஷாஜஹான்

நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளையின் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை, பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்ற கான்ஸ்டபிள், தற்காலிகமாக சேவையிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

கட்டானை பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த இராஜாங்க அமைச்சரின் வீட்டில் இரவு வேளையில் பாதுகாப்புக் கடமையில்  ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை, கொச்சிக்கடைப் பொலிஸ் நிலைய உப - பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மேற்பார்வை செய்வதற்காக குறித்த தினத்தன்று சென்றுள்ளார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் நித்திரையில் இருந்துள்ளார். மேற்பார்வை செய்வதற்காக சென்ற உப - பொலிஸ் பரிசோதகர், அதனை முறைப்பாட்டுப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், அது கைகலப்பாகவும் மாறியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையை அடுத்தே, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர், தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .