Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-யூ.எல். மப்றூக்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.மஸ்தான், தனது மாவட்ட அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில், முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, வன்னி மாவட்ட அபிவிருத்தி பணிகளில், முஸ்லிம் காங்கிரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறூக்கும் உறுதியளித்தார்.
முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே, மேற்படி இருவரும் இவ்வாறு உறுதியளித்துள்ளனர்.
வன்னி மாவாட்டத்தின் அபிவிருத்தி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது வன்னி மாவட்டத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று, வியாழக்கிழமை இரவு, மு.காவின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானும் கலந்துகொண்டதோடு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற அபிவிருத்திப் பணிகளில், மு.காங்கிரசுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் உறுதியளித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில். ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களில், வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட எம்.எம்.மஸ்தான் மட்டுமே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மு.காங்கிரசின் பிரதியமைச்சர்களான பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர். ஏ.ஆர்.ஏ.ஹபீஸ், சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், முத்தலிப் பாவா பாருக் மற்றும் மு.காங்கிரசின் வன்னி மாவட்ட முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago