2024 நவம்பர் 23, சனிக்கிழமை

தொழிலதிபர் படுகொலைக்கு காரணமான ஓரின சேர்க்கை

Editorial   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலங்கம பெலவத்தை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் காணப்பட்ட  ஆடை விற்பனை கூடத்தின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர், பலத்த அடிகளால் தலை மழுங்கடிக்கப்பட்டதால்   உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு சட்ட வைத்தியத்துறை பேராசிரியர் அசேல மெண்டிஸ் பிரேத பரிசோதனையை நேற்று (06) மேற்கொண்டார்.

சடலத்தை அவரது உறவினர்கள் அடையாளம் காணாததால், சம்பவம் மற்றும் உயிரிழந்த வர்த்தகர் மற்றும் அவரது தாயாரின் டி.என்.ஏ தொடர்பான பரிசோதனைகளை முன்னெடுக்க அனுமதியளிக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றுக்கு பொலிஸார், நேற்று (06) கேட்டுக்கொண்டனர்.

 பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளதுடன், டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை பிரேதப் பரிசோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இதேவேளை, கோடீஸ்வரர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் நேற்று (06) அனுமதி வழங்கியது.

வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹு பகுதியைச் சேர்ந்த ரொஷான் வன்னிநாயக்க (வயது 49) என்பவரே இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர் கொட்டிகாவத்தை, ராஜகிரிய, பெலவத்தை முதலான பல இடங்களில் உள்ள ஆடை விற்பனை நிலையங்களின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரும் வர்த்தகரும் ஓரினச்சேர்க்கையாளர்களின் நண்பர்கள் சங்கம் ஒன்றின் அங்கத்தவர்கள் எனவும், இந்த நண்பர் சங்கத்தின் ஊடாக பணத்திற்காக பல்வேறு நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளை  சந்தேக நபர் பேணி வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் ​தொழில் இல்லாதவர் என்றும், இந்த குழுவின் மூலம் பல்வேறு நபர்களுடன் சென்று பணம் சம்பாதிப்பதாகவும், திருமணத்திற்கு பிறகு அந்த பழக்கத்தை விட்டுவிட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமணமாகி வேலை இல்லாத காரணத்தால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், மீண்டும் பழையபடி பணம் சம்பாதிப்பதற்காக மேற்படி தொழிலதிபருடன் சந்தேகநபர் நண்பர்கள் சங்கம் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும்  பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவருக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு கடந்த 30ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உறவுகொள்வதற்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குச் வருமாறு  சந்தேகநபர்   பரிந்துரைத்த போதிலும், வர்த்தகர் அதனை விரும்பாததால் தனது பெலவத்தையை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவருக்குமிடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதன் பின்னர், ஓரினச் சேர்க்கையில் இவ்விருவரும் ஈடுபட்டுள்ளனர். அதற்காக ஒரு இலட்சம் ரூபாவை சந்தேகநபர் தொழிலதிபரிடம் கோரியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலதிபர் பணத்தை தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர், தொழிலதிபரை கீழே தள்ளிவிட்ட சந்தேக நபர், தொழிலதிபர் தரையில் விழுந்ததையடுத்து அவரது தலையில் தடியால் தாக்கியதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 தாக்குதலால் தொழிலதிபரின் கழுத்து உடைந்துள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாக பயந்து சடலத்தை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு ஓடியதாகவும் சந்தேக நபர் வாக்குமூலமளித்துள்ளார்.  தெரிவித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமணமாகாத இந்த கோடீஸ்வர வர்த்தகர், பெலவத்தை பிரதேசத்தில் மூன்று மாடி வீடு ஒன்றை வாங்கி, புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சடலம், பொலிஸாரால் பின்னர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கந்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் இளைஞனும், யுவதியொருவரும் கைது செய்யப்பட்டனர். இவ்விருவரும் திருமணமான ஜோடி என்பது கண்டறியப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X