2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தகனசாலைகள் 24 மணிநேரமும் உஷார்

Editorial   / 2021 ஓகஸ்ட் 06 , பி.ப. 06:04 - 0     - 174

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமையால், வைத்தியசாலைகளின் சவச்சாலைகளில், சடலங்களை வைத்திருப்பதற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்களை கவனத்தில் கொண்டு தகனசாலைகளை 24 மணிநேரமும் திறந்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள சகல தகனசாலைகளையும் இவ்வாறு 24 மணிநேரமும் திறந்து வைப்பத்றகு தீர்மானிக்கப்பட்டுள்ளது என களுத்துறை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்னாயக்க தெரிவித்தார்.

இந்த தீர்மானம் தொடர்பில் உள்ளூராட்சிமன்ற ஆணையாளருக்கும் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .