2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தொல்லியல் திணைக்கள வெற்றிடங்களை நிரப்ப ஜனாதிபதி ஆலோசனை

Kogilavani   / 2017 ஜனவரி 25 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொல்லியல் திணைக்களத்தின் சிரேஷ்ட அலுவலகர் பதவிகளுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு, உரிய தரப்பினருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொல்லியல் மையங்களின் பாதுகாப்பு மற்றும் தொல்லியல் செயற்பாடுகள் தொடர்பிலுள்ள தடைகளை நீக்கி, அவற்றை முறைமைப்படுத்துவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொல்லியல் மையங்கள் மற்றும் தொல்லியல் பொருட்களை பாதுகாப்பது தொடர்பில், மற்றுமொரு விசேட கலந்தரையாடல், ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு ​ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொல்லியல் மையங்களின் பாதுகாப்புக்காக, சிவில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்துமாறு, ஜனாதிபதி அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தார். அந்த செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.

இனங்காணப்பட்ட தொல்லியல் மையங்களின் பாதுகாப்புக்காக, ஏற்கெனவே சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம், இதன்போது சுட்டிக்காட்டப்பட்ட அதேவேளை, அவர்களுக்கான தங்குமிட பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பது தொடர்பாகவும்,  இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்லியல் மையங்களை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்புக்காக, பொருத்தமான செயற்றிட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .